About Us

WhatsApp Image 2024-11-17 at 11.02.48 AM
ABOUT US

Inspiring Lives Through God’s Grace

CSI Church Kuruvicaud is a vibrant community of believers dedicated to glorifying God and walking in His light. Rooted in faith and fellowship, we gather to celebrate God’s grace through inspiring worship, heartfelt prayer, and meaningful connections.

“Pray! And listen to God! You can do this alone, but find somebody to do it with you”

OUR HISTORY

History of Church

Tamil
English

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது  -சங்கீதம் 136: 23

குமரி திருமண்டல வரலாற்றில் நமது குருவிக்காடு திருச்சபை வரலாறு அதிகமாக அறியப்படவில்லை நமக்கு கிடைத்த வாய்மொழி பாரம்பரிய வரலாற்று புத்தகங்களில் உள்ளவைகளை சேகரித்து திருச்சபை வரலாற்றினை தருகிறோம்.
இயற்கை அமைவில் நம் குருவிக்காடு:
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவில் வடகிழக்காக சுமார் 11 கி.மீட்டர் தொலைவிலும் பேச்சிபாறையிலிருந்து தென் வடக்காக 15 கி.மீட்டர் தொலைவிலும் குலசேகரத்தில் இருந்து தென் வடக்காக 4 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்த அழகிய கிராமம் திருவரம்பு குருவிக்காடு.
இது அருகாமையில் ஆசியாவிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த மாத்தூர் தொட்டி பாலம், வருடம் முழுவதும் தண்ணீர் பாயும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.
எண்ணும்படி இவற்றை எல்லாம் இயற்கையாக இவ்வுலகுக்கு வழங்கி இருக்கிறார் இறைவன்.
மலையிலிருந்து புறப்பட்டு வருகின்ற ஆறுகள் நான்கு பக்கங்களிலும் ஓடி அலங்கரிக்கும் கோதையாறு நம் திருச்சபையின் மக்களை ஏதேன் தோட்டத்தை போல செழிப்படைய செய்து வந்தது.
குலசேகரத்தில் இருந்து திருவரம்பு வரை காளை வண்டி செல்லும் தடமாக இருந்தது. மக்கள் காளை வண்டியை போக்குவரத்துக்கு பயன்படுத்தினர். திருவரம்பு இருந்து திருவட்டார் வரை ஒற்றையடி பாதை தான் உண்டு 4 சதுர கிலோமீட்டர் கொண்டு அழகு மிகுந்த திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட செழிப்பான இடமாகும்.
விவசாயத்தை நம்பி வாழ்ந்தனர் மக்கள் பனைமரம், ஐனி மரம், பலா, முந்திரி, புங்கு, புளி போன்ற மரங்கள் இப்பகுதியில் எங்கும் நிறைந்து கிடந்தன. முக்கனிகள் ஆன திருவரம்பு மாம்பழம், பலாப்பழம், இங்கு நிறைய கிடைத்தன இவற்றின் பழங்கள் மக்களின் பசியை போக்கியது மட்டுமல்லாமல் குருவிகளின் பசியையும் தீர்த்தது.

கடவுளால் வழங்கப்பட்ட பணப் பயிரான ரப்பர் மரத்திலிருந்து பாலும் ரப்பர் மரப் பூவிலிருந்து தேனும் மக்களை செழிப்படைய செய்து பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசம் போன்று செழிப்பான கிராமமாக காட்சியளித்தது.

குருவிக்காடு பெயர் வரக் காரணம்:
குருவிக்காடு என்ற பெயர் எப்படி வந்திருக்கலாம் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. முற்காலங்களில் காடு நிரம்பிய பகுதியாக இருந்தது.
இதனால் இந்நிலப் பகுதியில் அரிய வகையான பறவைகள் இங்குள்ள பழங்களை சாப்பிட்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.
இவ்வாறு நாள்தோறும் விடியற்காலையிலும் மாலையிலும் பறவைகள் குருவிகள் எழுப்பும் இந்த ஒலிகளை கூர்ந்து கவனித்த அன்றைய மக்கள் இப்பகுதிக்கு பெயர் வைத்திருக்கலாம் என தெரிகிறது.
18- ம் நூற்றாண்டு இறுதியில், 19 -ம் நூற்றாண்டு துவக்கத்தில் இங்கிலாந்து சார்ந்த ஜார்ஜ் ஒயிட்பீல்ட் (George White Field) இந்த தீர்க்கதரிசியையும், ஜான் வெஸ்லி( John Wesly) என்ற சீர்திருத்த வாதியும், அவரது சகோதரர் சார்லஸ் வெஸ்லி (Charles Wesly) என்ற எழுத்தாளரையும் தேவன் எழுப்பினார். அவர்களின் அருமையான செய்தியால் இங்கிலாந்தில் எழுப்புதல் தீயாக பரவி தேசம் அசைய துவங்கியது. தாங்கள் பெற்ற சுவிசேஷத்தை, கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற தாகம் எழுப்புதல் உருவாகிற்று.

அந்த எழுப்புதலால் தூண்டப்பட்ட திருச்சபைகள் ஆண்டவரே பற்றி அறிவிக்க பணியாளர்களை நியமித்து உலகின் பல பகுதிகளில் நற்செய்தி பணியாளர்களை அனுப்ப தீர்மானித்தது. 1790 முதல் 1820 வரை பற்பல பகுதிகளில் மிஷினரி சங்கங்கள் இதன் மூலம் தோற்றுவிக்கப்பட்டன. அச்சங்கத்தில் மிக முக்கியமானது ' லண்டன் மிஷனரி சங்கம்'(L.M.S) ஆகும். இச்சங்கம் 1785- ம் ஆண்டு செப்டம்பர் 21- ம் நாள் தோற்றுவிக்கப்பட்டது.

லண்டன் மிஷனரி சங்கம் நமது தென்திருவிதாங்கூர் பகுதியில் சிறப்பான பணிகளை செய்தது. அதன் முதல் கனி மகாராஜன் வேதமாணிக்கம் ஆவார். மகாராஜன் வேதமாணிக்கம் அவர்களின் வேண்டுகோளின்படி 1804- ம் ஆண்டில் லண்டன் மிஷனரி சங்கத்தினர் இந்தியாவுக்கும் , இலங்கைக்கும் ஆறு மிஷனரி மார்களை பணிவிடையாளர்கள் ஆக அனுப்பினர்

றிங்கள் தௌபே , ஐந்து மிஷனரிகள் உடன் 1804 - ல் டிசம்பர் 4-ம் நாள் தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். தரங்கம்பாடியில் மிஷனரி பணி செய்தார் றிங்கள் தௌபே 1806-ம் ஆண்டு ஏப்ரல் 25 - ம் தேதி திருவிதாங்கூரில் மயிலாடியில் வந்து சேர்ந்தார். தென்திருவிதாங்கூர் மக்களின் ஆர்வத்தைக் கண்டு வீடு வீடாக சென்று ஆண்டவரை போதித்து வந்தார். அதனால் திருச்சபைகள் பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. 1816-ம் ஆண்டு தமது 10 ஆண்டு ஊழியத்தை திறம்பட செய்து மயிலாடி, பிச்சை குடியிருப்பு, தாமரைக்குளம், புத்தளம், ஆத்திக்காடு, கோவில்விளை, ஈத்தாமொழி என்னும் இடங்களில் திருச்சபைகளை ஸ்தாபித்தார். தென் திருவிரிதாங்கூரின் விடிவெள்ளி என்றழைக்கப்பட்ட வில்லியம் தொபியாஸ் , றிங்கள் தௌபே அவர்கள் வந்து சிறப்பாக பணி செய்தார்.

றிங்கள் தௌபேயை தொடர்ந்து மகாராஜன் வேதமாணிக்கம், மீட் ஐயர், மால்ட் ஐயரும் நமது மாவட்டத்தில் ஆண்டவருடைய பணியினை திறம்பட செய்தனர். அவர்களுடைய கடினமான ஊழியத்தின் பயணத்தால் சபைகளின் எண்ணிக்கை பெருகியது. 1818 - ல் நமது மாவட்ட கிழக்கு பகுதியினை சார்ந்த சபைகள் நாகர்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு மால்ட் ஐயர் தலைமையிலும், மேற்குப் பகுதியில் உள்ள சபைகள் நெய் ஊரைத் தலைமையிடமாகவும் கொண்டு மீட் ஐயர் தலைமையிலும் செயல்பட்டது. திருப்பணியில் மேற்கு பகுதியில் எல்லை மீட்ட எதிர் காலத்தில் தென் வடக்காக குளச்சல் முதல் ஆற்றூர் வரை விரிவடைந்தது. அப்போது அனைத்து திருச்சபைகளும் தோள்சிலைக் கழகம் என்ற துன்பத்தால் கடும் வேதனை அடைந்தது. மீட் ஐயர் அவர் 'இடைவிடாது ஜெபம் பண்ணுங்கள்' என்ற வசனத்தின்படி ஜெபம் பண்ணிக்கொண்டே தன்னுடைய ஊழிய பாதையில் மக்களை நடத்தினார். திருப்பணியில் மீட் ஐயர் தென் திருவிரிதாங்கோ ஊரின் தந்தை என அழைக்கப்பட்டார். 1819-ல் மீட் ஐயர் அவர்களும் மால்ட் ஐயரும் சேர்ந்து நாகர்கோவிலில் ஒரு வேதாகம கல்லூரியை துவக்கினர். அவர்கள் ஆரம்பித்த கல்லூரியில் பயின்ற திறமையான 3 மாணவர்களை 1820- ல் தேர்வு செய்து அவர்களிடம் துண்டு பிரதிகள், கிறிஸ்தவ சிறு நூல்கள், வேதாகம வசன பிரதிகள் ஆகியவற்றை கொடுத்து நாகர்கோவில் பகுதிக்கு ஒரு ஒரு மாணவனையும் மண்டைக்காடு பகுதிக்கு ஒரு மாணவனையும், ஆற்றூர் பகுதிக்கு ஒரு மாணவனையும் அனுப்பினர்.

இவர்கள் துண்டு பிரதிகளை இலவசமாகவும் சிறு புத்தகங்களை பகுதி விளைக்கும் வீடுகள் தோறும் சென்று கொடுத்ததும் அல்லாமல் சந்தை வீதிகளில் நின்று ஆண்டவரின் வசனத்தை பிரசங்கித்தனர். இதன் மூலம் நாளுக்கு நாள் திருச்சபைகள் வளர்ந்தன. அந்த வருடத்திலேயே (1820) 3000 பேர் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட்டனர்.
1852- ல் மீட் ஐயர் மிஷனை விட்டு நீங்கவே அந்தப் பணியில் பேலீஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். பேலிஸ் ஐயர் மரணமடைந்த பின்பு நெய்யூர் சேகரத்தை நடத்த(I.H.H) Rev. ஐசக் ஹென்றி ஹாக்கர் ஐயரே மிஷனரியாக தலைமை சங்கம் அனுப்பியது. Rev. ஐசக் ஹென்றி ஹாக்கர் ஐயர் அவர்கள் 1875 முதல் 1920 வரை சிறப்பாக பணி செய்தார்கள். அப்பொழுதுதான் நம்முடைய திருச்சபையைச் சார்ந்த மக்கள் ஆற்றூர் சென்று ஆண்டவரை ஆராதிக்க தொடங்கினர்.
இவ்வாறாக நமது மாவட்ட மக்கள் குறிப்பாக நமது மூதாதையர் தேவனே அறியாது இருந்தபோது, தேவன் அவர்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வேத வசனத்தை போதித்து தமது தேவனுடைய சித்தத்தின்படி முன் குறித்து பிதாவாகிய தேவன் இயேசுவை எந்த அளவு நேசித்தாரோ அந்த அளவு நம் முற்பிதாக்களையும் இறை பணியாளர்கள் நேசித்தனர். அவர்கள் கிபி. 1875 முதல் 1900 வரை ஆற்றூர் சென்று ஆண்டவரை பற்றி தெரிந்து கொள்ள ஆண்டவர் கிருபை புரிந்தார்.

கொல்வேல் பகுதியில் திருச்சபை:
தற்போது (R.C) கத்தோலிக்க திருச்சபை பக்கத்தில் கிபி. 1900 -ல் ஆற்றூர் சென்று ஆண்டவரை ஆராதித்து வந்த மக்கள் ஒரு ஓலைப் புரையை அமைத்து( 20 அடி நீளம் 20 அடி அகலம்) ஆண்டவரை தொழுது கொண்டிருந்ததாக செவி வழி செய்தியாக அறியப்படுகிறது.
குருவிக்காடு பகுதியில் ஆலயம்:
கொல்வேலில் இருந்த ஆலயத்தை, கருப்பவிளையை சார்ந்த காலம் சென்ற திரு. குருபாதம், மேடை வீட்டை சார்ந்த திரு. சகரியா, மற்றும் திரு. ஏசுவடியான் சுவிசேஷகர் ஆகியோரின் முயற்சியால் 1914- ம் ஆண்டு குருவிக்காட்டில் செட்டிக்குழிவிளை ( தற்போதைய திருவரம்பு (R.C)) கத்தோலிக்க திருச்சபை பக்கம் அமைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதி குருவிக்காடு என்று அழைக்கப்பட்டதால் நமது சபையும் குருவிக்காடு திருச்சபை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

History of Our Kuruvikkadu Parish

The history of our Kuruvikkadu Parish is not widely documented in the annals of Kumari Vividhagala. We have gathered insights from oral traditions and historical texts to present the legacy of this church to our community.

Kuruvikkadu is a picturesque village in Kanyakumari District, located in Kalkulam Taluk. It is situated about 11 kilometers northeast of Thuckalay, 15 kilometers south of Pechiparai, and 4 kilometers southeast of Kulasekaram.

The region is blessed with natural wonders like the Mathur Aqueduct—Asia's longest trough bridge—and the perennial Thirparappu Waterfalls. The rivers flowing from the surrounding hills encircle the area, creating a lush and fertile environment akin to the Garden of Eden. The Kothaiyar River, in particular, enriches the lives of the people here.

In earlier times, a bullock cart path connected Kulasekaram and Thiruvattar, while a narrow footpath extended from Thiruvattar to Thirparappu. The fertile lands of this beautiful area, now part of Thiruvattar Town Panchayat, were dotted with diverse trees like palms, jackfruit, cashew, pungan, and tamarind. Abundant fruits, such as mangoes and jackfruits, not only nourished the local people but also satisfied the birds that inspired the village's name.

Origin of the Name Kuruvikkadu

The name "Kuruvikkadu" is believed to have originated from the numerous rare birds that once inhabited the forested region. The people of those times, captivated by the chirping of these birds, named the area after them.

Christian Missionary Contributions

In the late 18th and early 19th centuries, missionaries like George Whitefield, John Wesley, and Charles Wesley kindled a spiritual awakening in England. Their fervor led to the establishment of missionary societies, including the London Missionary Society (LMS) in 1795.

The LMS made significant contributions to South Travancore, with Maharasan Vedamanickam being its first convert. At his request, LMS sent missionaries to India and Sri Lanka in 1804. Among them was Ringeltaube, who arrived in Travancore in 1806. He worked tirelessly, spreading the gospel and establishing churches, schools, and hospitals.

In 1816, Ringeltaube founded several churches in places like Mayiladi, Pitchai Kudiyiruppu, and Athikadu. He was followed by other dedicated missionaries like Maharasan Vedamanickam, Mead, and Mault. Their collective efforts expanded the church’s reach across South Travancore.

Establishment of Kuruvikkadu Church

In 1900, the people of Arumanai began worshiping under a thatched roof measuring 20x20 feet. Later, in 1914, a group led by Kurupadham from Karuppavilai, Sakariya from Mettaiveedu, and Evangelist Yesuvidhiyan moved the church to Chettikuzhivilai, near the present Thiruvarambu (R.C.) Catholic Church. This area, known as Kuruvikkadu, gave the church its name.

Today, the Kuruvikkadu Parish stands as a testament to the dedication and perseverance of early missionaries and the faithful devotion of the local community.